ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பிஹாரில் உஷார் நிலை

By செய்திப்பிரிவு

தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸ் 2 ஆண்டுகளுக்கு முன்பு வேகமாகப் பரவியது. அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டவருக்கு காய்ச்சல், மூட்டுவலி, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பாதிக்கப் பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறக்கின்றன. இதுவரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்பு களுடன் குழந்தைகள் பிறக் கின்றன. இதனால் இப் போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2017-ம் ஆண்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்தியாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் 22 பேர் ஜிகா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒருவர் பிஹாரை சேர்ந்தவர். எனவே பிஹாரில் முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

பிஹாரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு, சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்