மியான்மரில் இருந்து அசாமில் சட்டவிரோதமாக நுழைந்த 7 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

அசாமில் சட்டவிரோதமாக நுழைந்த 7 ரோஹிங்கியா அகதி கள் நேற்று மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மியான்மரில் கடந்த 2012-ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் கள் அண்டை நாடான வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி களாக உள்ளனர். அவர்கள் காஷ்மீரின் ஜம்மு பகுதி, ஹரியாணாவின் மேவாத் மாவட்டம், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை அவர்களின் சொந்த நாடான மியான்மருக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரோஹிங்கியா அகதிகள் குறித்த பயோ மெட்ரிக் தகவல் களை அனுப்புமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில் அசாமில் சட்டவிரோதமாக நுழைந்த 7 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டு அங்குள்ள சில்சார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டு குடி மக்கள் என்பதை உறுதி செய்த மியான்மர் அரசு, திரும்ப அழைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. அதன்படி 7 பேரும் நேற்று மியான்மருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அசாம் கூடுதல் டிஜிபி பாஸ்கர் ஜே. மஹந்தா கூறியபோது, "7 அகதிகளும் நேற்று மியான்மர் அதிகாரிகளிடம் ஒப் படைக்கப்பட்டனர். மணிப்பூர்-மியான்மர் எல்லையான மோரா எல்லை வழியாக அவர்கள் மியான்மருக்கு திருப்பி அனுப் பப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து முதல் முறையாக ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்கு திருப்பி அனுப்பப் பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

இதனிடையே 7 ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத் தில் சிலர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் வாதாடியபோது, "ரோஹிங்கியா முஸ்லிம்களின் உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதால் அவர்களை மியான் மருக்கு அனுப்ப தடை விதிக்க வேண்டும்" என்று வாதாடினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "7 அகதிகளையும் திரும்ப அழைத்துக் கொள்ள மியான்மர் அரசு ஒப்புக் கொண்ட தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படு கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியபோது, “7 பேரும் சட்டவிரோத குடியேறிகள். அவர் களை மியான்மர் அரசே திரும்ப அழைத்துக் கொள்கிறது. மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்ப வில்லை” என்று தெரிவித்தார். இறுதியில் மனுக்களை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்