சவுதியில் இருந்து போன் மூலம் முத்தலாக் கொடுத்தவர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவில் இருந்து மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் (விவாகரத்து) கொடுத்த வர் மீது உ.பி. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உ.பி.யின் பஹ்ரைச் மாவட் டத்தை சேர்ந்தவர் சந்தபாபு. சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நூரி (20). இவர் சந்தபாபுவின் சொந்த ஊரில் அவரது பெற்றோருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சந்தபாபு சவுதி அரேபியாவில் இருந்து தொலை பேசி மூலம் தனக்கு முத்தலாக் கொடுத்ததாக நூரி புகார் அளித் துள்ளார். இது தொடர்பாக சந்தபாபு, அவரது தாயார் மற்றும் சகோதரி மீது ருபைதீகா காவல் நிலையத்தில் நூரி புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது புகாரில், கணவர் குடும்பத்தினர் கேட்டபடி வரதட் சிணை தராததால் சந்தபாபு தனக்கு முத்தலாக் கொடுத்ததாக வும் இதன் பிறகு அவரது தாயாரும் சகோதரியும் தன்னை வீட்டி லிருந்து வெளியேற்றி விட்டதாக வும் கூறியுள்ளார்.

சந்தபாபுவின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் மோட்டார் சைக்கிளும் கேட்டதாக நூரியின் குடும்பத்தினர் கூறினர்.

இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சபராஜ் நேற்று தெரிவித்தார்.

முத்தலாக் சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தீர்ப்பு அளித்தது. முத்தலாக்கை தடை செய்து மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்காததால் மாநிலங்களவையில் அது நிறை வேறவில்லை. இதையடுத்து சில திருத்தங்களுடன் முஸ்லிம் பெண் கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) அவசரச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது. முத்தலாக் கொடுப்பதை இச்சட்டம் குற்றமாக கருதுகிறது. முத்தலாக் கொடுப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்