அசாமில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட் டத்தால் (பந்த்) ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சாலை களில் டயர்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் கொளுத்தினர்.

தேசியக் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை 2016-ம் ஆண்டு மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, சீக்கிய, புத்தமதத்தினர், பார்சிகள், ஜெயின், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றும் அரசின் முயற்சியைக் கண்டித்து அசாமில் நேற்று ‘பந்த்’ நடந்தது. இந்த ‘பந்த்’துக்கு கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி உட்பட 46 அமைப்புகள் அழைப்பு விடுத்தன. காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

‘பந்த்’ காரணமாக பல இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கவுகாத்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்தனர். போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது. ‘பந்த்’தால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

35 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்