காது கேட்காத, வாய் பேச முடியாத முன்னாள் ஐடி பணியாளர் தேர்தலில் போட்டியிட திட்டம்

By ஏஎன்ஐ

சென்னையில் படித்த காது கேட்காத, வாய் பேச முடியாத முன்னாள் ஐடி பணியாளர் ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எம்.எஸ்.சி.படித்தவர் சுதீப் சுக்லா. படிப்பை முடித்த சுக்லா இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ரூ.1 லட்சம் ஊதியம் பெற்றுவந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு சமூக சேவை செய்யும் நோக்கில், வேலையைத் துறந்தார் சுக்லா.

இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் சாத்னா தொகுதியில் போட்டியிட சுக்லா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ’’நான் நாட்டுக்காக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்.

அதனால் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். அரசியல்வாதிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவற்றை மறந்துவிடுகிறார்கள்’’ என்றார்.

சுக்லாவின் மனைவியும் மாற்றுத் திறனாளிதான். காது கேட்காத, வாய் பேச முடியாத அவர் பெங்களூருவில் பணியாற்றுகிறார். அவரின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதாக சுக்லா தெரிவித்துள்ளார்.

சுதீப் சுக்லா தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டிலேயே முதல் முறையாக காது கேட்காத, வாய் பேச முடியாத தேர்வு செய்யப்படும் எம்எல்ஏவாக இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

இணைப்பிதழ்கள்

44 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்