காஷ்மீர் எல்லையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: உள்ளூர் இணையதள சேவை, கல்வி நிறுவனங்கள் இயங்காது என அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு கிடைத்தது.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப்பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவ அதிகாரிகள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோபோர் நகரில் இன்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்