சிறுமி பலாத்கார விவகாரத்தில் குற்றவாளிக்குத் தூக்கு: 3 நாளில் தீர்ப்பு வழங்கி சாதனை

By பிடிஐ

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்கார குற்ற வழக்கில் விசாரணை முடிந்து 3 நாட்களில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனி விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அதேபகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவரை போலீஸார் அன்றே கைது செய்தனர்.

இந்த வழக்கில் சாகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுதான்சு சக்சேனா குற்றவாளி நரேஷுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மத்திய பிரேதச மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டசபையில் ஒருமனதாக மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அனைத்து விசாரணைகளும் நடந்து மூன்றே நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சாகர் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3வது முறையாக மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்