குழந்தை அழுததால் இந்திய குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: இனப் பாகுபாடு காட்டியதாகவும் புகார்

By செய்திப்பிரிவு

குழந்தை அழுததால் தன்னையும் தனது குடும்பத்தையும் விமானத் திலிருந்து இறக்கிவிட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது இந்திய உயரதி காரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில் இணைச் செய லாளர் அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடந்த 3-ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “கடந்த மாதம் 23-ம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டஷ் ஏர்வேஸ் விமானத்தில் குடும்பத்துடன் புறப்பட்டேன். விமானம் புறப்படும் முன் எனது 3 வயது மகன் அழுதான். எனது மனைவி சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத் தாததால் விமான ஊழியர் ஒருவர் அவனை அதட்டினார். விமானத்திலிருந்து வெளியே வீசி விடுவோம் எனவும் மிரட்டினார். இதனால் குழந்தை மேலும் அழுததால் அனைவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்ட னர். விமான ஊழியர்கள் முரட் டுத்தனமாக நடந்துகொண்டனர். இனப்பாகுபாடு காட்டினர். இறக்கிவிட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. புகார் அளித்தும் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்தப் புகார் தொடர்பாக முழுமையான விசாரணை தொடங்கியுள்ளோம். இனப் பாகுபாட்டை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்