2019 மக்களவை தேர்தலுக்காக புதிய இணையதளம்: ‘மாற்றத்திற்கான இந்தியா’ பிரச்சாரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை

அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பாஜக.வால் நியமிக்கப் பட்டுள்ளது. இதன் சார்பில் ‘மாற்றத்திற்கான இந்தியா’ எனும் பெயரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி யின் சாதனைகளைப் பட்டியலிட்டு வருகிறது. இந்த சாதனைகள் மத்திய அரசின் சாதனை என்பதால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப் புத்துறையும் சாதனைகளை மக்களிடையே எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப் புத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன்கீழ் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி நிலை யம், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல விழிப்புணர்வு அலுவலகம் ஆகியவை இணைந்து பணியாற்றுகின்றன. மத்திய அரசின் டிஏவிபி, டிஎப்பி மற்றும் ஒலி மற்றும் நாடகப்பிரிவு ஆகிய மூன்று அலுவலகங்கள், மண்டல விழிப்புணர்வு அலுவலகம் எனும் பெயரில் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளது.

இப்பணியில், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை விளக்கப்பட வுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் அறிவித்த திட்டங்களும் அதில் இடம்பெற உள்ளன. இவற்றை மத்திய அரசு அமலாக்கி யதை 87 பக்கங்களில் ‘மாற்றத் திற்கான இந்தியா’ இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளன. தூர்தர்ஷன் சார்பில் மத்திய அரசின் சாதனைகள் வீடியோ காட்சிகளாகப் படமாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

இந்த சாதனைகளை ஒலிகள் வடிவில் அகில இந்திய வானொலி அதில் பதிவு செய்ய உள்ளது. இந்த சாதனைப் பட்டியலை தம் தேவைக்கு ஏற்றபடி சுருக்கி டிஏவிபி, பத்திரிகைகளில் விளம் பரமாக அளிக்கும். மத்திய அரசின் சாதனைகளைச் சிறிய ஊர் மற்றும் கிராமங்களில் கண்காட்சியாக டிஎப்பி நடத்தும். மற்றொரு அலுவலகமான ஒலி மற்றும் நாடகப்பிரிவினர் நாடகங்களை நடத்தி சாதனைகளைப் பறை சாற்றும். இதன் மீதான செய்தி களும் மாற்றத்திற்கான இந்தியா இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும்.

பாஜக தனது ஆட்சியின் சாதனைகளைப் பறைசாற்றுவது முதன்முறை அல்ல. இதற்கு முன் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது 2004 மக்களவைத் தேர்த லில் ‘ஒளிர்கிறது இந்தியா’ எனும் பெயரில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்