முதல்வர் கூட்டங்களின்போது ஜீன்ஸ், கார்கோ பேன்ட் அணிந்து வரவேண்டாம்: திரிபுராவில் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

By ஏஎன்ஐ

திரிபுராவில் உள்ள அதிகாரிகள் அதிகாரபூர்வ செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு வருகை தருகையில் ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் போன்ற உடைகளை அணிந்து வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதுகுறித்து ஆகஸ்ட் 20 தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பாணையில், வருவாய், கல்வி மற்றும் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான முதன்மைச் செயலர் சுஷில் குமார் தெரிவித்திருப்பதாவது:

''முதல்வர் தலைமையில் மாநில அளவில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கு ஆடை அணிவிப்பது தொடர்பாக வரையறை செய்யப்படுகிறது. ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் போன்ற சில சாதாரண உடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மாநில அளவிலான உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வரும்போதும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த உடை வரையறையைப் பின்பற்ற வேண்டும்.

அதேபோல முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் கூட்ட நடவடிக்கைகளின்போது தங்களுடைய செல்போன்களில் வரும் செய்திகளை படிப்பது, செய்திகளை அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவது 'அவமதிப்பின் அடையாளமாகும்'' என்று குறிப்பாணையில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்