முசாபர்பூர் வன்முறை எதிரொலி: காப்பகங்களை ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மேனகா காந்தி உத்தரவு

By செய்திப்பிரிவு

முசாபர்பூர் மற்றும் தியோரியாவிலுள்ள காப்பகங்களில் பாலியல் பலாத்கார புகாருக்குப் பிறகு, அனைத்து சிறார் மற்றும் பெண்கள் காப்பகங்களையும் ஆய்வு செய்து, செப்டம்பர் 15 ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்ததாவது:

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே குழந்தைகளுக்கான அமைச்சகம், மாநிலங்கள் மற்றும யூனியன் பிரதேசங்களிடம் ஆலோசனை நடத்தியது. அதில் நாட்டில் மொத்தம் 7,109 காப்பகங்கள் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருவதாக சிறார் சீர்திருத்தச் சட்டம் 2015ன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

சட்டபூர்வமாக பதிவுசெய்யப்படாத அனைத்து காப்பகங்களையும் மூடிவிட்டு, உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ள காப்பகங்களுக்கு குழந்தைகளை இடமாற்றம் செய்யும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டவையா இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் அனைத்து சிறார் நல காப்பகங்களையும் சிறார் சீர்திருத்த சட்டத்தின்கீழ் பதிவு செய்வது அத்தியாவசியமானதாகும். மாநில அரசுகள் , யூனியன் பிரதேசங்கள் பதிவு செய்யும் பணியை இச்சட்டம் வரையறை செய்துள்ளது.

முசாபர்பூர் மற்றும் தியோரியாவிலுள்ள மகளிர் காப்பகங்களில் பாலியல் பலாத்கார வன்முறைகள் நடந்துள்ளன. எனவே, நாட்டில் உள்ள அனைத்து சிறார் மற்றும் பெண்கள் காப்பகங்களையும் ஆய்வு செய்து, செப்டம்பர் 15 ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

இது தவிர, வேலைக்குப் போகும் பெண்களுக்கான விடுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு எழுத்துப்பூர்வமான வேண்டுகோள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.

இதில், மத்திய குழந்தைகள் அமைச்சகத்தினால் நடத்தப்படும் பாலியல், உளவியல், வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பெண்கள் காப்பகங்கள், வித்தியாசமான சூழ்நிலைகளில் வந்து சேர்ந்துள்ள பெண்களுக்கான ஸ்வதார் இல்லங்கள், கடத்தப்பட்ட பெண்கள் சேர்க்கப்பட்டுள்ள உஜ்வாலா இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் வாழ்நிலைகளின் தரம் மற்றும் அங்கு அவர்களுக்கு அந்த இல்லங்களால் வழங்கப்படும சேவை போன்றவைகளை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறும் அந்த எழுத்துப்பூர்வமான வேண்டுகோளில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்