கேரள மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியைக் கடந்தது; கொச்சி விமான நிலையம் மூடல்

By செய்திப்பிரிவு

 

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் நீரைத் திறந்து விட்டுள்ளதால் கேரளா செருதோனி அணையிலிருந்து மேலும் நீரைத் திறக்கிறது.

முக்கியச் செய்திகள்:

கொச்சி விமானநிலையத்தில் இயல்பு நடவடிக்கைகள் சனிக்கிழமை வரை  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை விரைவில் அதன் வரம்பை எட்டிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 142 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 141.15 அடி நீர்மட்டம் உள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களுக்கு 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், “மிகப்பெரிய போரட்டத்தைக் கொண்டாடுவதன் நினைவாக இது உள்ளது. வரலாறு காணாத வெள்ளத்தினால் துயருற்ற மக்களுக்கு சுதந்திர தினம் நம்பிக்கையூட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் உச்சபட்ச எச்சரிக்கை:

வானிலை ஆய்வு மையம் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோட், மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாக்குளம் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், பதனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கு சிகப்பு எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு-கொல்லிகல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு:

தேசிய நெடுஞ்சாலை எண் 766 வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கேரளா-கர்நாடகா எல்லையில் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. முத்தங்காவில் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பட்டம்பி, திருச்சூர் இடையேயான சாலையில் போக்குவரத்து சாத்தியமேயில்லை காரணம் பட்டம்பியில் மேகா பாலத்தின் மீது பாரத்புழா வெள்ள நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்