விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி

By பிடிஐ

வரும் 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு முன்கூட்டியே எட்டப்படும் என பாஜக தலைவர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

‘வேளாண் பொருளாதார சீர்திருத்தத்தில் காப்பீடின் பங்கு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயம் பேசுபொருளாக மாறியது. கடந்த சுமார் 10 முதல் 15 ஆண்டுகளில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டுள்ளன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த தும் வேளாண் துறைக்காக பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. குறிப்பாக 75-வது சுதந்திர தினம் கொண் டாடப்பட உள்ள வரும் 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

இதை எட்ட மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எனவே, 2022-ம் ஆண்டுக்கு முன்பே இந்த இலக்கு எட்டப்படும். இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்கு 30 சதவீதமாக அதிகரிக்கும்.

வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் அதிக அளவில் செயல் படுத்தப்படுகின்றன. மேலும் கள்ளச் சந்தையில் யூரியா விற்கப்படுவது தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

இதுதவிர, ‘காரிப்’ பருவ விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு குறிப்பிடத்தக்க அள வில் உயர்த்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பயனடைவர். சில விளைபொருட்களுக்கு அதன் உற்பத்திச் செலவைப் போல 1.5 மடங்குக்கும் கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வேளாண் சீர்திருத் தங்கள் மேற் கொள்ளப்பட்டிருப் பது பாராட்டுக்குரியது. வேளாண் துறை சார்ந்த நவீன தொழில் நுட்ப நடைமுறைகள் இந்த மாநிலங் களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப் படுகின்றன. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

வலைஞர் பக்கம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்