முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்யலாம்: பிரவீண் தொகாடியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பிரவீண் தொகாடியா பேசியதாவது:

நம் நாட்டு மக்களிடமிருந்து ஏராளமான வரிப் பணம் அரசுக்கு கிடைக்கிறது. ஆனால், அந்த நிதியானது, சிறுபான்மையினத்தவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஒரே காரணத்தால் முஸ்லிம்களுக்கே அதிக அளவில் செலவிடப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அந்த நிதி, ஏழைகளின் நலன்களுக்காக செலவிடப்பட வேண்டும்.

எனவே, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், முஸ்லிம்களின் ஜனத்தொகையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி அரசு, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துள்ளது. பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை மத்திய அரசு முறையாக கையாளவில்லை. மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

விளையாட்டு

9 mins ago

இணைப்பிதழ்கள்

35 mins ago

தமிழகம்

45 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்