மருத்துவம், பொறியியல் சேர்க்கை: பொது நுழைவுத் தேர்வு நடத்த அதிமுக எதிர்ப்பு- மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தல்

By பிடிஐ

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகளே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வும், தேசிய அளவிலான பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்தத் தேர்வுகளை, அடுத்த ஆண்டு முதல் தேசியத் தேர்வுகள் நிறுவனம் (என்.டி.ஏ.) என்ற புதிய அமைப்பு நடத்தும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், இந்தத் தேர்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவ காரத்தை மக்களவையில் அதன் துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை நேற்று எழுப்பினார். இதுதொடர் பாக, கேள்வி நேரத்தின்போது அவர் பேசியதாவது:

மருத்துவம் மற்றும் பொறியி யல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் நிறுவனம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இத்தேர்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும்பட்சத்தில், ப்ளஸ் 2 மாணவர்களால் தங்களின் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. மாறாக, இந்த நுழைவுத் தேர்வுகளில்தான் அவர்கள் அதிக நேரம் செலவிட நேரிடும்.

மேலும், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதால், மிகவும் அறிவார்ந்த மாணவர் களால் மட்டுமே அவற்றில் வெற்றி பெற முடிகிறது. இதனால், கிராமப் பகுதிகளில் ஏற்கனவே மருத்துவர் கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

29 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்