50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி அரசு அதிரடி முடிவு

By பிடிஐ

50வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், பணிகளில் கவனக்குறைவாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். முதல்வராக ஆதித்நயாத் பதவி ஏற்றதில் இருந்து அரசுத் துறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அலுவலகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும், ஊழியர்கள் நேரத்துக்கு வர வேண்டும், பணிகளைச் சரியாக செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்து வருகிறார்.

மாநிலத்தில் மொத்தம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், அதில் 50 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் ஊழியர்களின் பணியை கண்காணித்து அவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது ஆதித்யநாத் தலைமையிலான அரசு. இதனால், 4 லட்சம் ஊழியர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வர உள்ளனர்.

இந்த 4 லட்சம் ஊழியர்களையும் கண்காணித்து, அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கை இம்மாதம் 31-ம் தேதிக்குள் அரசிடம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 50 வயதுக்கு மேல் உள்ள அனைத்துத் துறைகளின் தலைவர்களும், ஊழியர்களும் முழுமையான கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுகின்றனர். இவர்கள் பணியில் மந்தமாகவும், சுறுசுறுப்பின்றியும் இருப்பது ஆய்வில் அறியப்பட்டால் இவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் 50 வயது நிறைவடைந்த அனைத்து ஊழியர்களும் இதில் கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, எந்த நிரந்தர அரசு ஊழியரோ அல்லது தற்காலிக ஊழியரோ 50 வயதுக்கு மேல் இருந்தால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆனால், இந்த உத்தரவுக்கு உத்தரப்பிரதேச தலைமைச் செயலக ஊழியர்கள் அமைப்பின் யாதவேந்திர மிஸ்ரா கூறுகையில், “ மாநிலஅரசின் இதுபோன்ற உத்தரவுகள் அரசு ஊழியர்களை வேதனைப்படுத்தும் செயலாகும். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். மூத்த அரசு ஊழியர்களை வலுக்கட்டாயமாக ஓய்வு பெறக்கூறினால் விரைவில்மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 1986-ம் ஆண்டில் இருந்து அரசு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள், பலதுறைகளில் நடைமுறைப்படுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. அதை இப்போது அமல்படுத்துகிறோம். அதன்படி அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்களின் திறமையை முழுமையாக ஆய்வு செய்கிறோம். அதில் மோசமாகச் செயல்படுபவர்கள், பணியில் ஆர்வம் காட்டாதவர்கள் அனைவரும் இம்மாதம் 31-ம் தேதிக்குள் கட்டாய ஓய்வில் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

2017-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் 50 வயதை நிறைவு செய்த அரசு ஊழியர்கள் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதேபோன்ற திட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 50வயதுக்கு மேலானவர்கள் அனுப்பப்பட்டனர். அரசுத் துறைகளில் ஊழல் நடைபெறாமல் இருக்கவும், பணி செய்யாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் கட்டாய ஓய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனத் தெரிவித்தார்.

ஆனால், அரசின் நிதிக்கையோடு விதி 56-ன்கீழ் 50-க்கு மேற்பட்ட தற்காலிக ஊழியர் அல்லது நிரந்தர ஊழியரை பணியில் இருந்து நீக்கும் முன் 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

கல்வி

5 hours ago

மேலும்