விஐபிக்களின் காவல் வாகனங்களைவிட நோயாளியை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸுக்கே முக்கியத்துவம்: கர்நாடக போலீஸ் அதிரடி உத்தரவு

By ஐஏஎன்எஸ்

அவசர சிகிச்சைக்காக வேகமாக நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் இனி விஐபி பாதுகாப்புப் படை செல்லும்வரை சாலையில் காத்திருக்கத் தேவையில்லை என மாநகரத்தின் காவல் உயரதிகாரி தெரிவித்தார்.

மாநில காவல்துறைத் தலைவர் நீலமணி என்.ராஜூவின் உத்தரவின்படி, சாலையில் விஐபி செல்லும் பாதையில் அவருக்குப் பாதுகாப்பாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், நோயாளிகள் மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறும்பொருட்டு அவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் பெங்களூரு காவல் துறை ஆணையர் டி.சுனில் குமார் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.

மாநில துணை முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரான ஜி.பரமேஸ்வரா ராஜூவுக்கு எழுதிய ட்விட்டர் பதிவில், விஐபி பாதுகாவல் வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து அவரது ட்வீட் பதிவில், சில நேரங்கள் ஆம்புலன்ஸை நிறுத்தி எனது பாதுகாவல் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப அனுசரித்து எனக்கு வழிவிடுவதை நான் கவனித்து வந்துள்ளேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்து அவரை மீட்பதைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. முன்னோக்கி செல்லும், விஐபி காவல் வாகனங்கள் செல்வதற்காக எந்த ஆம்புலன்சும் நிறுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், கடந்த மாதம் பரமேஸ்வரா காவல்வாகனங்கள் செல்வதற்காக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்த ஓர் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம், அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சாலையில் வருகிறார் என முன்னே சென்றுகொண்டிருந்த காவல் வாகனங்களை தடுத்து நிறுத்தி மருத்துவ மனைக்குப் போய்க்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்த ஒரு காவல் உயரதிகாரி நிஜலிங்கப்பா மாநகரக் காவல் ஆணையரால் பாராட்டப்பட்டார்.

விஐபி செல்லும்பாதையில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தப்படும்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் ஒரு மனித உயிருக்கான சிகிச்சை மேலும் தாமதப்படும்பட்சத்தில் சிலருக்கு விலைமதிப்பற்ற அந்த பொன்னான நேரம் வாழ்வின் கடைசி மணித்துளிகளாகக் கூட இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

14 mins ago

தமிழகம்

50 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்