கேள்விகள் குறைப்பு: மக்களவையில் எம்.பி.க்கள் இனி நாள்தோறும் 5 வினாக்கள் மட்டுமே கேட்க அனுமதி

By பிடிஐ

மக்களவையில் நாள்தோறும் 10 கேள்விகளை எம்.பிக்கள் கேட்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 5 கேள்விகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வரும் மழைக்காலக்கூட்டத்தொடரில் இருந்து நாள்தோறும் 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதிக்கப்படும் எனத் மக்களவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மக்களவை செயலாளர் ஸ்னேகலதா ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவையில் கூட்டத்தில் ஒரு எம்பி ஒருவர் நாள்தோறும் 10 கேள்விகள் வரை கேட்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், வரும்  கூட்டத்தொடரில் இருந்து அது 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

10பி விதிப்படி மக்களவை சபாநாயகர் உத்தரவுப்படி இந்த விதிமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் எம்.பி.க்கள் அளிக்கும் கேள்விகள் எண்ணிக்கை 230க்கு அதிகமாக இருப்பதால், இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின்படி, ஒவ்வொரு எம்.பி.யும் நாள் ஒன்றுக்குக் கேட்கும் கேள்விகள் எண்ணிக்கை 10லிருந்து 5ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 10 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தால், அது மறுநாள் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த திருத்தம் அடுத்த கூட்டத்தொடரில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சுற்றுச்சூழல்

33 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்