பெங்களூர் ஐஐஎஸ்சி உள்பட 6 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: தரவரிசையில் சென்னை ஐஐடிக்கு 2-வது இடம்

By செய்திப்பிரிவு

பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி நிறுவனத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

நாட்டிலுள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (ஐஐஎஸ்சி) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2-வது இடத்தை சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. 3-வது இடத்தை மும்பை ஐஐடி, 4-வது இடத்தை டெல்லி ஐஐடியும் பிடித்துள்ளன. காரக்பூர் ஐஐடி 5-வது இடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமை 6-வது இடத்தையும், ஐஐடி கான்பூர் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, பிஐடிஎஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் மத்திய அரசால் நடத்தப்படுபவை. எஞ்சிய 3 நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்