சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு - சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்

By பிடிஐ

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்தின் மூலம் பெற்றதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சம் கொடுத்து முறை கேடாகக் கையகப்படுத்தியதாகவும் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்

. ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் சோனியாவும் ராகுலும் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை சோனியா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனை வரும் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் சோனியா, ராகுல் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதை கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி சமர் விஷால் பதிவு செய்து கொண்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்