ஒடிசாவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய ரயில்: போராடி நிறுத்திய ஓட்டுநர்

By செய்திப்பிரிவு

ஒடிசாவில் ரயில் பாதையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தண்ணீரில் சிக்கிக் கொண்டது.

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் ஒடிசா மாநிலத்தில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கடலோரா மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் புவனேஸ்வரில் இருந்து ஜெகதல்பூர் நோக்கி சென்ற கிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை ராயகடா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியது. ரயில் சென்று கொண்டிருக்கும்போது கல்யாணி ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காற்றாற்று வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.

இதை பார்த்து அதிர்ந்து போன ரயில் ஓட்டுநர் மிகவும் சிரமமப்பட்டு ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சற்று நேரத்திற்கு பிறகு தண்டவாளத்தில் தண்ணீர் அளவு சற்று குறைந்தவுடன் அருகே இருந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லபட்டு வேறு வழித்தடத்தில் அந்த ரயில் இயக்கப்பட்டது.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்