விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது தினசரி யோகா பயிற்சி: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

By பிடிஐ

தினசரி யோகாப் பயிற்சி விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதாக அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழக நிறுவனமான எய்ம்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேச்சர் ரிவியூ யூராலஜி இதழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இந்த ஆய்வை நடத்திய நிபுணர்கள் எய்ம்ஸில் உள்ள உடற்கூறியல் துறை நிபுணர்களாவர். இவர்களுடன் யூராலஜி மற்றும் மகப்பேறியல் துறை நிபுணர்களும் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

விந்தணுக்களின் கோளாறடைவதற்குக் பெரும்பாலும் டிஎன்ஏ சேதமே காரணம். ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கு விந்துவில் உள்ள மரபணுக் கூறுகளின் தரநிலை மிக முக்கியமானது என்கிறார் எய்ம்ஸின் டாக்டர் ரீமா தாதா

“விந்து டி.என்.ஏ. சேதம்தான் மலட்டுத்தன்மைக்கும், பிறப்பிலேயே குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பதற்கும் சில வேளைகளில் உடனடியாக கருச்சிதைவு ஏற்படுவதற்கும் பெரும்பாலும் காரணமாக அமைகிறது. மேலும் இதுதான் பிறந்த குழந்தைகள் மரபணு ரீதியான பிரச்சினைகளுக்கும், சில வேளைகளில் குழந்தைகளின் நிரந்தர நோய்க்கும் காரணமாகிறது” என்கிறார் டாக்டர் தாதா.

டி.என்.ஏ. சேதமடைவதற்கு டி.என்.ஏ.வின் ரசாயன அமைப்பைச் சேதப்படுத்தும் கூறுகளே காரணம், இது அகக்காரணிகளாகவும் இருக்கலாம் புறக்காரணிகளாகவும் இருக்கலாம். இதனால் ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் உடலின் எதிர்-ஆக்சிஜன் திறனில் சமநிலை குலைவு ஏற்படுகிறது.

பொதுவாக உடலில் உள்ள செல்களில் ஆண்களின் விந்தணு செல்கள்தான் இந்த சமநிலைக் குலைவுக்கு பெரும்பாலும் ஆட்படுகின்றன.

ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கப்படும் இது அக மற்றும் புறக்காராணிகளால் தோன்றுகின்றன. புறக்காரணிகளாக சுற்றுச்சூழல் மாசு, பூச்சிக்கொல்லிகள், மின்காந்த கதிர் வீச்சு, கிருமித்தொற்று, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன், ஊட்டச்சத்தற்ற விரைவு உணவுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இத்தகைய காரணிகளை நம் வாழ்முறையில் சிறிது மாற்றம் செய்தால் தடுத்து விடலாம். இது நம் டி.என்.ஏ. தரத்தை மேம்படுத்தும், இது ஆண் மலட்டுத்தன்மையைக் குறைக்கும்.

இந்த வகையில்தான் தினசரி யோகப்பயிற்சி, டி.என்.ஏ. சேதங்களைக் குறைக்கிறது, குரோமோசோம் முனையில் இருக்கும் அமைப்பு ஒன்றின் நீளத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

6 மாதங்கள் யோகப்பயிற்சி மேற்கொண்ட 200 ஆண்களை வைத்து பரிசோதனை மேற்கொண்டதில் இந்த விவரங்கள் கிடைத்துள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“21 நாட்களில் விந்தணுக்களின் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைவதை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டோம். மேலும் 6 மாதங்களில் டி.என்.ஏ. தரமும் மேம்பாடு கண்டுள்ளது. அழற்சியும் குறைந்துள்ளது, விந்தணுக்கள் மட்டமும் இயல்பு நிலையில் இருந்தது, குரோமோசோம் முனையில் இருக்கும் அமைப்பின் நீளமும் பராமரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது” என்றார் டாக்டர் தாதா.

சிலபல ரசாயனங்களின் அளவுகள் உயர்ந்துள்ளதைக் கொண்டு இதனை விளக்க முடியும், இதனால் நரம்புநெகிழ்வுத்தன்மையும் அதிகரித்துள்ளது.

ஃப்ரீ ரேடிகள்களைக் குறைத்து யோகப் பயிற்சி வயதாவதால் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதோடு, டி.என்.ஏ சேதத்தையும் தடுக்கிறது, என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்