அல்-கய்தா, ஐஎஸ் அமைப்புகளின் கிளைப் பிரிவுகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அல்-கய்தா, ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளின் புதிய கிளைப் பிரிவுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் அல்-கய்தா மற்றும் இராக்கிலிருந்து இயங்கும் ஐ.எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அமைப்புகள் புதிதாக தோற்றுவித்திருக்கும் சில இயக்கங்களையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்து தடை செய்யப்படுகின்றன.

அதன்படி, அல்-கய்தாவின் கிளை அமைப்பான அல்-கய்தா இந்தியத் துணைக் கண்டம் (ஏக்யூஐஎஸ்), ஐஎஸ் அமைப்பின் கிளைப் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே ஆகியவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிராகவும், இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியிலும் இவ்விரு இயக்கங்களும் ஈடுபட்டு வந்துள்ளன. எனவே, தேசநலனைக் கருத்தில் கொண்டு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

21 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

19 mins ago

சினிமா

37 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

31 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

45 mins ago

வலைஞர் பக்கம்

49 mins ago

சினிமா

54 mins ago

மேலும்