உத்தவ் தாக்கரேயுடன் அமித் ஷா சந்திப்பு

By செய்திப்பிரிவு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி பாஜகவையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது வீட்டில் அமித் ஷா நேற்று சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் அப்போது உடன் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி தொடர வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரேயிடம் அமித் ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது. முன்னதாக நேற்று காலை வெளியான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இனிவரும் தேர்தல்களில் சிவசேனா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இணைப்பிதழ்கள்

22 mins ago

தமிழகம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

49 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்