பிஹாரில் தேர்வுக்கு வந்த மாணவிகளின் பிளவுஸ் கைப்பகுதியை வெட்டியதால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

பிஹாரில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் பிளவுசின் கைப்பகுதியை வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நர்சிங் தேர்வு நடந்தது. தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக, மாணவிகள் அணிந்திருந்த பிளவுசின் கைப்பகுதியை அங்கிருந்த பணியாளர்கள் கத்தரித்த பிறகே தேர்வு கூடத்துக்குள் அனுமதித்தனர். வெட்டப்பட்ட பிளவுசின் கைப்பகுதியை எடுத்துக் கொண்டு பெண்கள் வந்தனர். இந்தக் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வு நடத்த தடை விதித்ததுடன் விசாரணை நடத்தவும் முசாபர்பூர் மாவட்ட கல்வி அதிகாரி லாலன் பிரசாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்