தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப் பணிகளை ஆய்வு செய்தார் மோடி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தேசிய மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.

நிகழ் நிதியாண்டுக்கான பட் ஜெட் தாக்கலின்போது, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் காப்பீட்டு வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற் றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் அண்மையில் அறிவிக் கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, இத்திட்ட அமலாக்கத்துக்காக இதுவரை நடந்து முடிந்த பணிகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த உயரதிகாரிகள் விளக்கினர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

38 mins ago

உலகம்

38 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்