ராகுல் காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. தோல்வியடைந்த மன்னரா மோடி தலைமையிலான ஆட்சிக்கு ரிப்போர்ட் கார்டு தருவது என்று விமர்சித்துள்ளது பாஜக.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசுக்கு ட்விட்டரில் ரிப்போர்ட் கார்டு வெளியிட்டார். அதில், வேளாண்மை, வெளியுறவு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ‘எப்’ கிரேடு கொடுத்துள்ள ராகுல், சுய விளம்பரத்துக்கு மட்டும் ‘ஏ+’ கிரேடு கொடுத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “டியர் ராகுல் காந்தி, உங்களைப் போன்ற தோற்றுப்போன தலைவரா, சிறப்பாக செயல்படும் மோடி அரசுக்கு மதிப்பெண் வழங்குவது. உங்கள் கட்சிக்கு நீங்கள் சேர்த்த புகழ் பற்றிய தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 2013-ல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகும், கடந்த ஆண்டு தலைவராக பதவியேற்ற பிறகும் அக்கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதாவது 24 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
13 mins ago
சினிமா
20 mins ago
விளையாட்டு
43 mins ago
வணிகம்
55 mins ago
இந்தியா
57 mins ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago