லாலுவுக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் 6 வாரம் ஜாமீன்

By செய்திப்பிரிவு

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்தித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 6 வாரகாலம் ஜாமீன் வழங்கி உத்தர விட்டது.

கடந்த 1990-ம் ஆண்டு பிஹார் முதல்வராக லாலு பிரசாத் இருந்தபோது கால் நடைகளுக்கு தீவனம் வழங் கும் திட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க 1996-ல் பாட் னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் லாலு மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் 3 வழக்குகளில் அவர் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், லாலுவின் மகனும் பிஹார் எம்எல்ஏவு மான தேஜ் பிரதாப்பின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ராஞ்சி சிறைத்துறை சார்பில் லாலுவுக்கு நேற்று முன்தினம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, பாட்னாவுக்கு லாலு பிரசாத் நேற்று சென்றார்.

இந்தச் சூழலில், லாலுவின் உடல்நலக் குறைவைக் கார ணம் காட்டி, அவருக்கு 12 வார கால ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், அவருக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

சுற்றுலா

54 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

1 min ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்