ஜனநாயகக்தை அழிக்கிறது; அமலாக்கத்துறையை ஏவும் மோடி அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு

By பிடிஐ

 

நாட்டில் உள்ள ஜனநாயகத்தைச் சிதைக்க நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். எங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுப்பதற்காக அமலாக்கப்பிரிவை ஏவுகிறார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதையடுத்து, 104 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய்வாலாவிடம் அனுமதி கோரியது. அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரியது.

இந்த சூழலில், ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சிஅமைக்க அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பைத் தொடர்ந்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விதான் சவுதா அருகே காந்திசிலை முன் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்துக்குப்பின், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜகவுக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவிதமான பெரும்பான்மையும் இல்லை. எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மத்திய அரசு இப்படிதான் நடந்து கொள்வதா?. நாட்டில் உள்ள ஜனநாயகத்தை அழிக்க மோடி விரும்புகிறார்.

ஆளுநர் வாஜுபாய் வாலா , எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்கவைத்து, அவருக்குப் பெரும்பான்மையை நீரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். எதற்கு இந்த 15 நாட்கள், பேரம்பேசுவதற்காகவா?

பாஜகவுக்குப் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. அதனால், எங்கள் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது. இதற்காக பிரதமர் மோடி, அமலாக்கப்பிரிவை எம்எல்ஏக்கள் மீது ஏவி அவர்கள் மீது வழக்கு தொடக்கிறது, அவர்களுக்கு நெருக்கடி அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங் எம்எல்ஏ பாஜகவின் பக்கம் சென்றுவிட்டார். அவருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்ததால், அதன்மூலம் நெருக்கடி அளித்து அவரைச் சேர்த்துவிட்டனர். இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கிடம் நான் பேசவில்லை, ஆனால், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவிடம் அவர் தொலைபேசியில் பேசி தனது பிரச்சினையைத் தெரிவித்துள்ளார். அவரின் நலனுக்காக அவர் பாஜகவில் இணைந்துவிட்டார்.

எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதற்கான திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மாநிலத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததில் இருந்து, அவர் தனது பதவியைத் தவறாகப்பயன்படுத்திவிட்டார்.

நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. ஆதலால், பாஜகஅல்லாத, எதிரான கட்சிகள் அனைத்தையும், ஒன்று சேர்க்க வேண்டும், அதற்கு தலைமை ஏற்று நடத்துங்கள் என்று தந்தை தேவகவுடாவிடம் தெரிவித்து இருக்கிறேன்.

பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஒரு அணியில் திரள வேண்டும். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், மாயாவதி, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஒன்றாக கரம் கோர்த்துச் செயல்பட வேண்டும். வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அதை ஒதுக்கிவைத்து ஒன்றிணைய வேண்டும்

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

 

இதைப்படிக்க மறந்துடாதீங்க...

முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்

கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது’- ராம்ஜெத் மலானி விளாசல்

பெரும்பான்மையை நிரூபிப்பேன்; 5 ஆண்டுகள் ஆட்சி செய்வேன்: எடியூரப்பா நம்பிக்கை

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்