வகுப்புவாதம், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

By பிடிஐ

 ஜாதிக்கலவரம், வகுப்பு வாதம், நாடாளுமன்றத்தை முறையாக நடத்தாதது ஆகியவற்றைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரம் இருந்து வருகின்றனர்..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வில் 23 நாட்களும் அமளியால் முடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலங்குதேசம் எம்.பி.க்களும், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி தெலங்குதேசம் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியது.

நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல், எதிர்க்கட்சிகள் முடக்கியதைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் பொய்பிரச்சாரங்களை எதிர்த்தும் வரும் 12-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே மத்தியில் ஆளும் பாஜகவின் ஆட்சியில் நாட்டில் வகுப்புவாதங்களும், ஜாதி மோதல்களும் அதிகரித்து வருதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் 9-ம் தேதி (இன்று)மாநில, மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், பி.சி.சாக்கோ, டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜெய் மக்கான், மாநில காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

இதற்கிடையே உண்ணாவிரத மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாஜன் குமார், ஜெகதீஸ் டைட்லர் ஆகியோர் இருந்தனர். ஆனால், கடந்த 1984-ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், ராகுல் காந்தி மேடைக்கு வந்ததும் இருதலைவர்களும் மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

இதனால், சாஜன் குமார் கோபமாக உண்ணாவிர இடத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்