மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்தமோதலில் 14 மாவோயிஸ்ட்கள் பலி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று மோதலில் ஈடுபட்ட 14 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காவல் துறை ஐஜி சரத் ஷெலார் நேற்று கூறிய தாவது:

கட்சிரோலி மாவட்டம் பாம்ரா காத் நகருக்கு அருகே உள்ள தட்கான் கிராம வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தக வல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் கட்சிரோலி போலீஸ் அதிரடிப்படையின் சி-60 கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர் மாவோயிஸ்ட் அமைப்பினர் சிலர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் மாவோயிஸ்ட் அமைப்பின் மாவட்ட அளவி லான காமாண்டர்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறை தலைவர் (டிஜிபி) சதிஷ் மாத்தூர் கூறும்போது, “சத்தீஸ்கர் மாநி லம் பீஜப்பூர் மாவட்ட எல்லை யை ஒட்டி உள்ள கசனசூர் வனப் பகுதியில் சி-60 கமாண்டோ படையினருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சாய்நாத் மற்றும் சினு (எ) ஸ்ரீகாந்த் ஆகிய 2 முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்டகாரன்யா பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக இதுவரை நடந்த தாக்குதல்களில் இது மிகப்பெரிய வெற்றி ஆகும். இந்த சண்டையில் ஈடுபட்ட வீரர்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை. இந்த வீரர்களுக்கு பாராட்டுகள்” என்றார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

28 mins ago

வணிகம்

32 mins ago

சினிமா

29 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

51 mins ago

வணிகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்