மகா சிவராத்திரி: அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, கஜோல் ட்விட்டரில் வாழ்த்து

By ஐஏஎன்எஸ்

இன்று நாடுமுழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, கஜோல் இயக்குநர் மதுர் பண்டார்கர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த பண்டிகை சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆனதைக் கொண்டாடுவதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் இன்று இரவு முழுக்க கண்விழித்திருப்பர். பக்திப் பாடல்கள் பாடுவதும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவர்.

ட்விட்டரில் தெரிவித்துள்ள பாலிவுட் கலைஞர்களின் வாழ்த்து விவரம்:

அமிதாப் பச்சன்: மகா சிவராத்திரி அனைவருக்கும் வாழ்த்துகள்.

விஷால் தத்லானி: ஹேப்பி மகா சிவராத்திரி அனைவருக்கும்! சிவபெருமான் உங்களுக்குள் இருக்கும் இனவாதத்தையும், ஊழலையும்  அரசியலில் குற்றவாளிகளையும் அழித்து விடுவார்.

ரோணித் போஸ் ராய்: மகா சிவராத்திரி கி அநேக் சுபெச்சாயேயின். இந்த நல்ல நாளில் நல்ல வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும், ஜெய் போலாநாத்.

ஸ்ரீதேவி: மகா சிவராத்திரியின் இந்த நல்ல தருணத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அனுபம் கேர்: ஹேப்பி மகா சிவராத்திரி

ஹேமமாலினி: இன்று இரவு மகா சிவராத்திரி. இந்த புனித நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

கஜோல்: சிவபெருமானின் சக்தி உங்களுக்கு செழிப்பும் வளமும் தரட்டும். ஹேப்பி மகா சிவராத்திரி.

மதுர் பண்டார்கர்: ஓம் நமசிவாய! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஹேப்பி மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்... நமக்கு அமைதியும், மகிழ்ச்சியையும் மற்றும் வளத்தையும் அவர் தருவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்