நாடு முழுவதும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,565 ஆக அதிகரிப்பு: மூவர் பலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, குறிப்பாக கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், அதன் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் தீவிர அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,565 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஜன., 02) தெரிவித்துள்ளது. தற்போதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,366 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,44,765,50 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் இன்று கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையின்படி, “பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளா (83 பேர்), கோவா (51 பேர்), குஜராத் (34 பேர்), கர்நாடகா (8 பேர்), மகாராஷ்டிரா (8 பேர்), ராஜஸ்தான் (5 பேர்), தமிழ்நாடு (4 பேர்), தெலங்கானா (2 பேர்) , ஒடிசா மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் என 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

35 mins ago

உலகம்

3 mins ago

க்ரைம்

26 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

தமிழகம்

39 mins ago

உலகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

கல்வி

1 hour ago

மேலும்