ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா பாதிப்பு

ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது, கடந்த 227 நாட்களில் அதாவது 7 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதற்கு முன்பு கடந்த மே 19-ம்தேதி 865 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளானதே அதிகபட்சஅளவாக இருந்தது. அதையடுத்து, டிசம்பர் 5 வரையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்துக்குள் வந்தது. இந்த நிலையில், புதிய திரிபு கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, குளிர் காலமும் முக்கிய காரணமாகியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுக்கு கிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,309-ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 599 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in