நம்பகக் குறைபாடுடைய தீர்ப்பு: 2ஜி குறித்து எஸ்.குருமூர்த்தி

By செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சுப்பிரமணியன் சுவாமி உடனடியாக மேல்முறையீடு செய்து அரசு நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்வீட்டில் 2ஜி தீர்ப்பு குறித்து தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“நம்பகக் குறைபாடுடைய ஒரு தீர்ப்பாகும் இது.

உண்மையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்காணித்து வந்தது. உரிமங்களை ரத்து செய்தது, சிறப்பு நீதிபதியை நியமித்தது அதனால் இந்த வகையில் இது உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான தீர்ப்பாகும்.

எனவே மேல்முறையீடு செய்ய பொருத்தமான ஒரு வழக்காகும் இது” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்