ஹபீஸ் சயீது கூட்டத்தில் பங்கேற்றதால் பாகிஸ்தானுக்கான தூதரைவாபஸ் பெற்றது பாலஸ்தீனம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வலித் அபு அலி திரும்பப் பெறப்பட்டுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீது கூட்டத்தில் அவர் பங்கேற்றதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பாலஸ்தீனம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.

பாகிஸ்தானில் அடிப்படைவாத வலதுசாரி குழுக்களின் கூட்டமைப்பான ‘டிபா-இ-பாகிஸ்தான் கவுன்சில்’ நேற்று முன்தினம் ராவல்பிண்டியில் கூட்டம் நடத்தியது.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீது இதன் தலைவர் ஆவார்.

இந்நிலையில் கூட்டத்தில் ஹபீஸ் சயீதுடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வலீத் அபு அலி கலந்துகொண்டார். இதற்கு டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரிடம் இந்தியா தனது கண்டனத்தை தெரி வித்தது.

இந்நிலையில் தூதர் வலீத் அபு அலியை பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுள்ளதாக இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல் ஹைஜா நேற்று தெரிவித்தார்.

“அபு அலியின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இனிமேல் தூதர் இல்லை. அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பாலஸ்தீனம் திரும்புவார்” என்றும் அவர் கூறினார்.

ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்காக நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்படும் என டிபா கவுன்சில் அறிவித்ததாக பாகிஸ்தானின் ‘தி நேஷன் நாளேடு’ செய்தி வெளியிட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

43 mins ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

31 mins ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்