ஜெருசலேம் விவகாரம்: ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க காஷ்மீரில் கட்டுப்பாடு

By ஐஏஎன்எஸ்

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை அன்று சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் விரைவில் ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து மூத்த பிரிவினைவாத தலைவர்களான சையத் அலி, மிர்வைஸ் உமர் ஃபரூக் மற்றும் முகமது யாசின் மாலிக் ஆகியோர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் பழைய ஸ்ரீநகரில் உள்ள நோவட்டா, எம்.ஆர்.கன்ச், சஃபா கடல் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மிர்வைஸ் உமர் ஃபரூக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சையத் அலி கிலானி வீட்டுக் காவலில்தான் உள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்