சமாஜ்வாதி நிலைப்பாட்டை மீறி முத்தலாக் மசோதாவுக்கு முலாயம் மருமகள் ஆதரவு

By செய்திப்பிரிவு

முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும். முஸ்லிம் பெண்களின் நீண்டகால கோரிக்கைக்கு இது தீர்வாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

56 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்