பாய்லர் வெடித்து பெரும் விபத்தில் சிக்கிய என்.டி.பி.சி. நிலையம் செயல்பட ஓராண்டுக்கும் மேலாகும்

By ஐஏஎன்எஸ்

பாய்லர் வெடித்து 35 உயிர்களை பலிகொண்ட பெரும் விபத்தில் சிக்கிய உன்சாஹர் என்.டி.பி.சி. மின் உற்பத்தி நிலையிம் மீண்டும் செயல்பட ஓராண்டுக்கும் மேல் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த பாய்லர் வெடிப்பினால் என்.டி.பி.சி. உன்சாஹர் மின்னுற்பத்தி நிலையத்தின் 6-வது யூனிட் கடும் சேதமடைந்துள்ளதகவும் எனவே இது மீண்டும் செயல்பட ஓராண்டுக்கும் மேல் ஆகும் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரதமரின் ‘சவுபாக்கியா யோஜனா’ திட்டமும் கூட பாதிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் சவுபாக்கியா யோஜனாவின் கீழ் 8 மாநிலங்களில் 2.5 கோடி மக்கள் இந்த யூனிட்டிலிருந்து மின்சாரம் பெறுவார்கள், இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40% உ.பி. மாநிலத்துக்குச் செல்கிறது, இப்போது யூனிட் ‘முழுதும் சேதமடைந்துள்ளதால்’ பிரதமரின் திட்டம் பாதிப்படையலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் 6-ம் யூனிட்டிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் சண்டிகர், டெல்லி, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட், இமாச்சல் ஆகிய மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாநிலங்களில் உ.பியை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு 74.09 மெகாவாட், ஜம்மு காஷ்மீருக்கு 55.19 மெகாவாட், ஹரியாணாவுக்கு 37.95 மெகாவாட், உத்தராகண்ட் மாநிலத்துக்கு 30.64 மெகாவாட், இமாச்சலத்துக்கு 22.21 மெகாவாட், டெல்லிக்கு 27.59 மெகாவாட், சண்டிகர் மாநிலத்துக்கு 4.19 மெகாவாட் மின்சாரம் உன்சாஹர் பிளாண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. மொத்த மின்னுற்பத்தியில் 75மெகாவாட் யாருக்கும் ஒதுக்கப்படுவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

வாழ்வியல்

53 mins ago

உலகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்