பாத யாத்திரை செல்வதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது: ஜெகனுக்கு சிபிஐ நீதிமன்றம் மறுப்பு

By என்.மகேஷ் குமார்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நவம்பர் 2-ம் தேதி ஆந்திராவில் பாத யாத்திரையை தொடங்க உள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நடைபெறும் இந்த பாத யாத்திரை, 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அடித்தளமாக அமைய அக்கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். கடப்பா மாவட்டம், இடுபுலபாயா பகுதியில் தொடங்கி, இச்சாபுரம் வரை 3,000 கி.மீ அனைத்து மாவட்டங்களிலும் பாதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெகன்மோகன் வெள்ளிக்கிழமைதோறும் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். நவம்பர் 2-ம் தேதி பாத யாத்திரை தொடங்குவதால், 6 மாதத்துக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஜெகன்மோகன் தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், பாதயாத்திரை செல்வதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜெகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

52 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்