ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

By பிடிஐ

 

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு சொல்லுமா? என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்யும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளைப் பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் ''அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் எண் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும். நவம்பர் இறுதி வாரத்தில் இந்த விசாரண தொடங்கும்'' எனக் கூறினர்.

முன்னதாக தனிநபர் ரகசியத்தை காப்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் உத்தரவில் கூறியது. ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு தனிநபர் உரிமைக்கு எதிரானது கூறப்படும் நிலையில், இதுபற்றியும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது ''மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒரு சட்டத்திற்கு எதிராக மாநில அரசு பிரிவு 32ன் கீழ் எவ்வாறு ரிட் மனு தாக்கல் செய்ய முடியம்? அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது குடிமக்கள் இந்த பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும். ஆனால் மாநில அரசு இந்த பிரிவின் கீழ் அணுக முடியாது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுமானால் குடிமகன் என்ற அடிப்படையில் இந்த பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்'' என உச்ச நீதிமன்றம் கூறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

30 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்