மத்திய பேரிடர் நிவாரண நிதி: 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2,105 கோடி ஒதுக்கீடு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும், கரோனோ காலத்தில் தனிமைப்படுத்தல், சோதனை, அத்தியாவசிய உபகரணங்களின் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறைந்த தொகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி 2019 - 20ம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் வருடாந்திர ஒதுக்கீட்டில் 35 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அளவு 2020 - 21ம் நிதி ஆண்டில் 50 சதவீதமாக ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ.12,214 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.12,825 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.13,465 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.23,186 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.23,186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ.9382 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.9658 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.10,937 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.17,825 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.17,747 கோடி மத்திய அரசின் பங்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 2017-18ம் ஆண்டில் ரூ. 748 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ. 786 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ. 825 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.1,088 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.1,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ.561 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.707 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.500 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.816 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.816 கோடி மத்திய அரசின் பங்கு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2017-18ம் ஆண்டில் ரூ.351 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.900 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.286 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.566 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2,105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்