146 - துறையூர் (தனி)

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
இந்திராகாந்தி அதிமுக
ஸ்டாலின் குமார் திமுக
பீரங்கி கே.சுப்ரமணியன் அமமுக
யுவராஜ் மக்கள் நீதி மய்யம்
இரா.தமிழ்செல்வி நாம் தமிழர் கட்சி

2006 பொதுத் தேர்தல் வரை உப்பிலியபுரம் (பழங்குடியினர்) தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் துறையூர் (எஸ்சி) தொகுதியாக மாற்றப்பட்டது. மலைக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் விவசாயிகள் அதிகம். குறிப்பிடும்படியான தொழிற்சாலை எதுவும் இல்லை.

உப்பிலியபுரம் தொகுதியில் ஏற்கனவே இருந்த பகுதிகளுடன் முசிறி வட்டத்துக்குட்பட்ட சில கிராமங்கள் இணைக்கப்பட்டு, 57 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 427 கிராமங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

துறையூர் தாலுக்கா

முசிறி தாலுக்கா (பகுதி)

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்

தொகுதி பிரச்சினைகள்

திருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் தலங்களான புளியஞ்சோலை, பச்சைமலை ஆகியன இந்தத் தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக, திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்ட பகுதிகள் அடங்கிய பச்சைமலையில் மரவள்ளி கிழங்கு, தேன் எடுத்தல் ஆகிய பிரதான தொழில்கள். பல்லாண்டுகளாக இங்குள்ள மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பச்சமலையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும், இங்குள்ள மங்களம் அருவிக்குச் செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த தொகுதி மக்களால் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தத் தொகுதியில் 1962 முதல் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக (ஜெ) அணி ஒரு முறையும், திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஸ்டாலின்குமார், அதிமுக வேட்பாளரான ஏ.மைவிழியை தோற்கடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,09,171

பெண்

1,16,359

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,25,545

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ. மைவிழி

அதிமுக

2

எஸ். ஸ்டாலின் குமார்

திமுக

3

எல்.ஆர். சுஜாதேவி

விசிக

4

வி. ஆனந்தன்

ஐஜேகே

5

எஸ். சத்யா

நாம் தமிழர்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

இந்திரகாந்தி.T

அதிமுக

75228

2

பரிமளாதேவி.S

திமுக

64293

3

ரெங்கராஜி.S

பாஜக

1828

4

கணேசன்.V

சுயேச்சை

1753

5

தர்மலிங்கம்.A

சுயேச்சை

1295

6

அறிவழகன்.M

பகுஜன் சமாஜ் கட்சி

1289

7

சுமதி.S

சுயேச்சை

945

8

செந்தில்குமார்.J.K

சுயேச்சை

118

9

சம்பத்குமார்.P

தமுமுக

630

10

சிங்காரம்.K

சுயேச்சை

380

148452

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்