90 - சேலம்(தெற்கு)

By செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பாலசுப்ரமணியன் அதிமுக
சரவணன் திமுக
வெங்கடாசலம் அமமுக
எம்.மணிகண்டன் மக்கள் நீதி மய்யம்
ச.மாரியம்மா நாம் தமிழர் கட்சி

1951-ம் ஆண்டு தேர்தலின்போது, சேலம் நகரம் என அழைக்கப்பட்ட தொகுதி 1957-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை சேலம் 1-வது தொகுதி என அழைக்கப்பட்டது. பின்னர், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் 2008-ம் ஆண்டு முதல் சேலம் தெற்கு சட்டப்பேரவை தொகுதியாக இருந்து வருகிறது. இத்தொகுதி, சேலம் மாநகரின் முக்கிய கடை வீதிகள் அடங்கிய பகுதிகளைக் கொண்டது. ஜவுளி, சாய தொழிற்சாலை, வெள்ளி, தங்க நகை ஆபரண தொழில், கைத்தறி நெசவு ஆகியன பிரதான தொழிலாக உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

சேலம் மாநகராட்சி வார்டு எண் 37 முதல் 60 வரை உள்டக்கியுள்ளது. சேலம் அம்மாபேட்டை, முதல், இரண்டாவது அக்ரஹாரம், டவுன், தாதகாப்பட்டி, குகை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, மணியனூர் என மக்கள் நெருக்கம் மிகுந்த தொகுதியாக விளங்கி வருகிறது.

பெரும்பான்மை சமுதாயம்:

சேலம் தெற்கு தொகுதியில் கன்னட தேவாங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அதேபோல, தாழ்த்தப்பட்டோர், முதலியார், பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களும் கனிசமாக உள்ளனர்.

தொகுதியின் பிரச்சினைகள்:

பாதாள சாக்கடைக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், நகர பகுதியில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் செய்யாததால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபாடு, மழை காலங்களில் சாக்கடை கழிவுகள் வீடுகளுக்குள்ளும், சாலைகளில் பெருக்கெடுத்து சென்று பொது சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

2020-ன் படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,501

பெண்

1,30,575

மூன்றாம் பாலினத்தவர்

19

மொத்த வாக்காளர்கள்

2,56,095

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ.பி.சக்திவேல்

அதிமுக

2

எம்.குணசேகரன்

திமுக

3

ஜி.ஜெயசந்திரன்

விசிக

4

கே.குமார்

பாமக

5

என். அண்ணாதுரை

பாஜக

6

பி.பிரேமா

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

90. சேலம்-தெற்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M.K. செல்வராஜ்

அ.தி.மு.க

112691

2

S.R. சிவலிங்கம்

தி.மு.க

52476

3

N. அண்ணாதுரை

பி.ஜே.பி

2377

4

N. மகாலிங்கம்

யு.சி.பி.ஐ

2325

5

M.R. சிவஞானந்தம்

ஐ.ஜே.கே

622

6

R. பாண்டியன்

பி.எஸ்.பி

600

7

P. பாலகிருஷ்ணன்

சுயேச்சை

462

8

M.A. ஷாஜகான்

சுயேச்சை

423

9

J. ஜானகிராமன்

சுயேச்சை

395

10

K. கலைச்செல்வன்

சுயேச்சை

287

11

G. விஸ்வநாதன்

எல்.எஸ்.பி

279

12

A. சபரிமுத்து

சுயேச்சை

156

13

D. அன்பு

எ.டி.எஸ்.எம்.கே

125

14

N. சண்முகம்

சுயேச்சை

95

15

K.C. தாமஸ்

எ.ஐ.ஜே.எம்.கே

88

16

V. கோபால்

சுயேச்சை

63

173464

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்