விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எது, வேட்பாளர்கள் யார்? - திருமாவளவன் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றாலும், அளிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென அக்கட்சி முனைப்புடன் பணியாற்ற முடிவு செய்துள்ளது. விசிக சார்பில் போட்டியிடவுள்ள அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை வழங்கவுள்ளனர்.

இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவன் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் யார்?, தேர்தல் பிரச்சார வியூகம், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டன. சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 5 தொகுதிகள் வரை கேட்டு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்