மகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி

By இ.ஜெகநாதன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால், கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமியோ கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், நகைக்கடன், மகளிர் குழுக் கடன் தள்ளுபடி என அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது மகளிர் மத்தியில் அதிமுகவின் இமேஜை உயர்த்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக, தாங்கள் அறிவித்ததைத்தான் பழனிசாமி அறிவித்தார் என்று கூறி வருகிறது. இருந்தாலும் மகளிர் குழுவினர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வகையில் ஐ-பேக் குழுவினர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு யோசனையைத் தெரிவித்தனர்.

இதையடுத்து கட்சி நிர்வாகிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் குழுக்களைச் சந்திக்க திமுக தலைமை உத்தரவிட்டது. அதன்படி நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் மகளிர் குழுக்களைச் சந்தித்து ‘கடன் தள்ளுபடி அறிவிப்பு அதிமுக தேர்தலுக்காக அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய அனைத்துக் குறைகளையும் 100 நாட்களில் தீர்த்து வைப்பார்,’ என்று கூறி மனுக்களை வாங்கியுள்ளனர்.

மகளிர் குழுக்களும் ஆர்வமுடன் தங்களது குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளனர். அவற்றை நிர்வாகிகள், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்