திருவண்ணாமலை

கள நிலவரம்: திருவண்ணாமலை தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

திருபத்தூர் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மாவட்ட தலைநகரின் பெயரில் திருவண்ணாமலை தொகுதியாக மாறியுள்ளது. முந்தைய திருப்பத்தூர் தொகுதி, பல ஆண்டுகளாக திமுக வலிமையாக இருந்த தொகுதி. திமுகவின் சார்பில் வேணுகோபால் பலமுறை வென்ற தொகுதி இது.

இந்த மக்களவைத் தேர்தலில் எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), சி. என். அண்ணாதுரை (திமுக), ஞானசேகர் (அமமுக), அருள் (மநீம) ரமேஷ் பாபு (நாம் தமிழர்) உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலையைப் பொறுத்தவரையில் திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது. அதேசமயம் பாமகவுக்கு இந்தத் தொகுதியில் அதிகமான வாக்கு வங்கி இருப்பதால் அதிமுகவுக்கு கூடுதல் பலம். எனவே அதிமுக மற்றும் திமுகவும் சம பலத்துடன் இங்கு மோதுகின்றன.

இதில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

இணையதள கருத்துக் கணிப்பின்படி திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரைக்கு ஏறுமுகம். அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி 2-வது இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் ரமேஷ்பாபு 3-ம் இடத்திலும் உள்ளனர். அமமுகவின் ஞானசேகர் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT