கமல் போட்டியிடவில்லை; சிவகங்கையில் சினேகன், கோவையில் மகேந்திரன் போட்டி: மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை. சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சினேகனும், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதற்கிடையே மக்கள்நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களின் நேர்காணல் கடந்த வாரம்சென்னையில் நடைபெற்றது. கல்வித் தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்கட்டமாக 21 பேர்களின் பெயர்களை கமல்ஹாசன் சென்னையில் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார்.

இதில் கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்நிலையில்,  மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கமல் இன்று அறிவித்தார். கமல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் போட்டியிடவில்லை.

மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

சிவகங்கை- சினேகன்

கோவை- மகேந்திரன்

காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை - அருள்

ஆரணி - வி.ஷாஜி

கள்ளக்குறிச்சி - கணேஷ்

தென்சென்னை - ரங்கராஜன்

மதுரை - அழகர்

தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

கடலூர் - அண்ணாமலை

தென்காசி - முனீஸ்வரன்

திருப்பூர் - சந்திரகுமார்

பெரம்பலூர் - அருள்பிரகாசம்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

ஈரோடு - சரவணக்குமார்

ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்

கரூர் - ஹரிஹரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

21 mins ago

தொழில்நுட்பம்

44 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்