‘இரட்டைத்தாக்குதல்’ மூலம் அதிமுக வாக்குகளை பிரிக்க திட்டம்: தங்க தமிழ்ச்செல்வனின் இடம்பெயர்வு பின்னணி

By என்.கணேஷ்ராஜ்

சட்டப்பேரவை, மக்களவை என இரண்டிலும் அதிமுகவுக்கு சாதகமான வாக்குகளை பிரிக்கும் நோக்கில் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மக்களவைத் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அதிமுகவுக்கு வலுவான போட்டியை ஏற் படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் அதிமுகவே அதிகம் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அந்த கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. மேலும் காங்கிரஸும் இத்தொகுதியில் களம் இறங் குகிறது.

ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவைத் தொகுதியில் களமிறங்குகிறார். முதன்முறையாக தனது மகன் போட்டியிடுவதால் துணை முதல்வர் வரிந்து கட்டிக் கொண்டு முழு மூச்சாக முனைப்பு காட்டி வருகிறார். இருப்பினும் மகனுக்கு சீட் கொடுத்ததால் கட்சிக்குள் அதிருப்தி இருந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக  ஈவிகேஎஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் தனது மகனைக் கள மிறக்கி இருப்பது அமமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள் ளது.

ஏற்கெனவே கட்சி சின்னத்தை இழந்தது, தகுதி நீக்கம் செய்யப் பட்டது, கட்சியைக் கைப்பற்றிக் கொண்டது என்று கடும் கோபத்தில் இருக்கும் அமமுக தலைமை,  இந்த தேர்தலில் ரவீந்திரநாத்தை வெற்றிபெற விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலு த்தி வருகிறது.

இதற்காக தங்கள் சார்பில் வலுவான வேட்பாளரை களமிறக்கும் நோக்கிலேயே தங்கதமிழ்ச் செல்வனை வேட்பாளர் ஆக்கி இருக்கிறது.

தங்கதமிழ்ச்செல்வனைப் பொறுத் தளவில் அவரது சமூக வாக்குகள், தமிழக அளவில் பிரபலமான முகம், ஏற்கெனவே செய்த நலத்திட்ட உதவிகள் சாதகமான அம்சங்களாக அமமுகவினர் தெரிவிக்கின்றனர். 

அதே வேளையில் ஆண்டி பட்டி சட்டப் பேரவைத் தொகுதி யை கைப்பற்றும் நோக்கில் அங்கு அமமுக சார்பில் ஜெயக்குமார் களமிறக்கப்பட்டுள் ளார்.

இத்தொகுதியில் அதிமு கவுக்கு சரிநிகர் போட்டியாக காங்கிரஸ் உள்ளது. இதனால் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது.

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், இரட்டை இலைச் சின்னம் உள்ளது. 

எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்றனர். வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஒருபடி மேலே சென்று மற்ற கட்சிகளால் எங்களை நெருங்கக்கூட முடியாது என்றார்.

தேனி தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால்  மூன்று கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்