திமுக கூட்டணியில் தேனி தொகுதியை எதிர்பார்க்கும் காங்கிரஸ்: மீண்டும் சீட் பெற முயற்சிக்கும் முன்னாள் எம்.பி.

By பி.டி.ரவிச்சந்திரன்

தேனி மக்களவைத் தொகுதி யில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி தொகுதி களும், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டதாகும்.

பெரியகுளம் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறு வரையறையின்போது தேனி மக்களவைத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

தேனி தொகுதியாக 2009-ல் மாற்றம் செய்யப்பட்ட பின் நடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2004, 2009 நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஜே.எம். ஆரூண் ரசீத் வெற்றிபெற்றார். காங்கிரசுடன் கூட்டணியில்லாமல் தேர்தலைச் சந்தித்ததால் 2014 தேர்தலில் போட்டியிட்ட திமுக தோல்வி அடைந்தது. அதிமுக வெற்றிபெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதியை ஒதுக்க திமுக தலைமை விரும்பும் என காங்கிரஸ் கட்சியினர் எதிர் பார்க்கின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கி ரஸ் கட்சிக்கு தேனி தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சமீபத்தில் வடபுதுப்பட்டி ஊரா ட்சிக் கூட்டத்தில் பங் கேற்க வந்த மு.க. ஸ்டாலினை வரவேற்று நாளிதழ்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஆரூண் ரஷீத் விளம்பரம் செய்திருந்தார். அவர் சீட் கேட்க வாய்ப்புள்ளதையே இது காட்டுவதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸுக்குத்தான் தேனி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்